Breaking
Tue. Jan 7th, 2025

யூடியூப்பில் ASMR  என்ற தலைப்பில் ஓர் கவர்ச்சியான பெண் கமெரா முன் தோன்றி அவர் ஏதோ சில விடயங்களை மிக மெல்லிய தொணியில் முணு முணுப்பது போன்ற ஒரு வீடியோவை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளதா?

அப்படியானல் ASMR என்ற மனிதர்களின் வினோத கூச்ச உணர்வு பற்றி ஏற்கனவே நீங்கள் அறிந்துள்ளீர்கள்.  உங்களுக்குள் உங்கள் தனிப்பட்ட புலன்கள் சார்ந்த கிளர்ச்சி மற்றும் அதன் வெளிப்பாடே ASMR (Autonomous Sensory Meridian Response). இதை அனுபவிக்க வேண்டுமாயின் அந்த உணர்வு தூண்டப்பட வேண்டும் என யாரோ ஒருவர் கூற.

இதோ வருகிறோம் என்று கமெராவுடன் புறப்பட்டு விட்டனர் யூடியூப் பதிவர்கள். ஒரு சில மாதங்களுக்குள் ASMR உணர்வுக்காக பல லட்ச வீடியோக்கள்.

நாள் முழுவதும் சமூக வலைத் தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்குப் புத்துணர்ச்சியை அளித்து இரவில் இனிமையான உறக்கத்துக்குக் கூட இட்டுச் செல்லவே இவ்வீடியோக்கள் என்கின்றார்கள் அவர்கள். ஆச்சரியம் என்னவென்றால் தற்போது இவ்வகையான வீடியோக்கள் யூடியூப்பில் எதிர்பார்த்ததை விட பன்மடங்கு பார்க்கப் பட்டு வருகின்றதாம்.

இந்த ASMR இனை நீங்கள் உங்கள் தலை, உச்சந்தலை, முதுகு அல்லது புற உறுப்புக்களில் தொடுகை, நுகர்வு, பார்வை, கேள்வி போன்ற ஏதேனும் புலனுடன் தொடர்புடைய ஊடகம் வாயிலாக அனுபவிக்க முடிகின்றதாம்.

யூடியூப்பில் இது தொடர்பான பொதுவான ஓர் வீடியோவை நோக்கினால், ஓர் கவர்ச்சியான பெண் கமெரா முன் தோன்றுவார் அவரது முகம் தெளிவாகக் காட்டப்படும். அவர் சில விடயங்களை முணு முணுப்பது போல் இருக்கும். ஆனால் இவை உங்களை அமைதிப் படுத்துவதுடன் ஒருநிலைப் படுத்தவும் செய்யுமாம். இறுதியில் இனிமையான உறக்கத்துக்குக் கூட இட்டுச் செல்லக் கூடும்.

Related Post