Breaking
Sun. Dec 22nd, 2024
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் சரத் குமார அறிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சையில் நாடு முழுவதிலும் பாடசாலைகளினூடாக 4 இலட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்கான தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு முறையாக விண்ணப்பங்களை நிரப்பி யூன் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவேண்டும்.
மார்ச் 31ஆம் திகதி வரையே விண்ணப்ப திகதி கொடுத்திருந்த போதும் இதுவரை 20 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
அவற்றிலும் 2 ஆயிரத்து 500 விண்ணப்பங்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன விண்ணப்ப திகதி நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறுதி நேர சிக்கல்களை தவிர்த்துக்கொள்வதற்கு அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும் விரைவில் முறையாக பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Post