Breaking
Fri. Jan 10th, 2025

யெமனில் உள்ள இலங்கையர்கள் 54 பேர் அரசாங்கத்தின் உதவியுடன் அங்கிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். ​யெமனில் தற்போது கிளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அங்குள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பணி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வகையில் 3 இலங்கையர்கள் இந்தியாவுக்கும் 03 இலங்கையர்கள் இந்தோனேஷியாவுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த 06 ஆம் திகதி ஏனைய 43 இலங்கையர்கள் சீன வாகனத்தின் உதவியுடன் டிஜிபௌரி இடத்திற்கும் மீட்டெடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் 5 இலங்கையர்கள் யெமனிலிருந்து ஓமானுக்கு சென்றனர் பின்னர் ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் உதவியுடன் திரும்பவும் நாட்டுக்கு அனுப்படவுள்ளனர். இலங்கையர்களை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கென்யா நாட்டின் தலைநகர் நைரோபி நகர உயர் ஸ்தானிகரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

இதனடிப்படையில் டிஜிபௌரியிலிருந்து 29 இலங்கையர்கள் QR 656 ஆம் இலக்க விமானத்தில் கெழும்பு விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்கள். இதனை முன்னிட்டு மீட்டெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து நாட்டு அரசினருக்கும் இலங்கை அரசு தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Related Post