Breaking
Sun. Jan 12th, 2025

யெமனில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை இன்றைய தினத்திற்குள் மீட்க முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களால் அங்கு பணிபுரிந்த 120 இலங்கையர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை மீட்கவென வெளிவிவகார அமைச்சு அண்மைய நாட்களில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

யேமனின் பிரதான விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் இலங்கையர்களை கடல் வழியாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

Related Post