Breaking
Sat. Jan 11th, 2025
கிளர்ச்சியிடம் பெற்றுவரும் யேமனில் சிக்கியிருந்த 38 இலங்கையர்கள் சீன தூதரகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இலங்கையர்கள் சீன யுத்தக்கப்பலினூடாக இவர்கள்  பஹ்ரேனுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
இதேவேளை, கிளர்ச்சி இடம்பெறும் பகுதிகளில் இருந்து காப்பாற்றப்பட்ட 8 இலங்கையர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி வைக்க ஒத்துழைப்பு வழங்குவதாக பஹ்ரேன் அரசாங்கம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.
கிளர்ச்சி இடம்பெற்று வரும் யேமன் தலைநகர் சனாவில் 40 இலங்கையர்களும் ஹொடிடா பகுதியில் 11 இலங்கையர்களும் சிக்கியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யேமன் கிளர்ச்சியால் சனா, ஹொடிடா, அதேன், முக்குல்லா நகரங்களில் உள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Post