Breaking
Mon. Dec 23rd, 2024
ஒலி, ஒளிபரப்பு ஒழுங்கு முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் (கடற்படை அதிகாரி) யோசித்தவின் சி.எஸ்.என் தொலைக்காட்சி நிலையத்தை நேற்று பொலிஸ் நிதிமோசடி பிரிவினர் சோதனையிட்டனர்.

கொழும்பின் புறநகர் பத்தரமுல்லையில் இந்த தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ளது.

இந்தநிலையில் சோதனையின்போது பல கணணிகள், மடிக்கணணி ஒன்று என்பன விசாரணைகளின் நிமித்தம் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை நடவடிக்கை கடுவெல நீதிமன்ற அனுமதியின்கீழ் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனை முற்பகல் 10 மணியிலிருந்து பல மணித்தியாலங்களாக இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post