இங்கிலாந்தின் டாக்மாத் அரச கடற்படை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசிலை பெற்ற அவர் அங்கு பயிற்சிநெறியை நிறைவு செய்யாமலேயே இலங்கை திரும்பிவிட்டார்.
எனினும் கடற்படையின் பெஜ்டொப் பயிற்சியை எவ்வாறு நிறைவுசெய்தார் என்று விசாரணை செய்யுமாறு கோரியே இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
அத்துடன் அரசபணியில் இருந்தநிலையில் எவ்வாறு தனியார் நிறுவனம் ஒன்றை நடத்திச் செல்ல முடியும் என்றும் விசாரணை செய்யுமாறு ஜே விபி உறுப்பினர்கள் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
இந்த முறைப்பாடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்படவிருப்பதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான டாக்டர் நளின்.டி.திஸ்ஸ தெரிவித்தார்.
அதேநேரம், ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையின் பாதுகாப்பு, நிதி மற்றும் இளைஞர் விவகாரம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வைத்திருந்தவர்கள் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.