முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ வெளிநாடு செல்வதற்காக தாக்கல் செய்திருந்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சீ.எஸ்.என் தொலை காட்சி நிறுவனத்தில் இடம் பெற்ற மோசடி தொடர்பாக யோசித்தவின் வெளிநாட்டு பயணம் தடை செய்யப்பட்டிருந்தது.
எனவே,மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதித்தருமாறு யோசித்த இந்த மனுவை அவரது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
யோசித்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நிதிமோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு மார்ச் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.