விழுந்த தொலைபேசி எடுத்துக்கொண்டு யோஷித்த உள்ளே ஓடினார். இந்த சம்பவம் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின் அத்தியட்சகர் சோமவன்ஸ உட்பட இரண்டு அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. எனினும் இந்த அதிகாரிகள் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
வழமையாக கைதி ஒருவரிடம் தொலைபேசி இருப்பது தெரியவந்தால், அவர் இருக்கும் சிறையில் தேடுதல் நடத்தப்பட்டு தொலைபேசியும் அந்த நபரை சிறைச்சாலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும்.
சாதாரண கைதி ஒருவர் இவ்வாறு தொலைபேசியுடன் சிக்கினால் அவருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்படும். எனினும் யோஷித்த ராஜபக்ச இன்னும் சிறையில் தொலைபேசியை பயன்படுத்தி வருகிறார். இது சிறையில் பகிரங்மான இரகசியமாகும்.
அதேவேளை வெலிகடை சிறைச்சாலை வைத்தியசாலையில் மூன்றாம் இலக்க விடுதியில் கட்டில் வழங்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிக்கும் ஞானசார தேரரும் தொலைபேசி ஒன்றை பயன்டுத்தி வருகிறார். இதனை அதிகாரிகள் அறிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், நீதவான்கள் இது குறித்து கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கைதிகள் தொடர்பான இறுதியான பொறுப்பு நீதிமன்றத்திற்கே இருப்பதாகவும் அந்த கடிதங்களில் கூறப்பட்டுள்ளது.