Breaking
Mon. Dec 23rd, 2024
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவை பார்வையிட வருபவர்களுக்கு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்சவை பார்த்து நலன் அறியும் நோக்கில் கடந்த சில தினங்களாக பெரும் எண்ணிக்கையிலானோர் சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளனர்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக யோஷித்த ராஜபக்ச ஒரு நாளில் மூன்று பேர் மாத்திரமே பார்வையிட முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

யோஷித்த ராஜபக்சவை காண நேற்று (2) நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெரும்பாலானோர் சிறைச்சாலைக்கு சென்றிருந்ததுடன் அவர்களில், நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர ஏனையோர் சிறைச்சாலை அதிகாரிகளினால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

By

Related Post