Breaking
Mon. Dec 23rd, 2024

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்குப் பின்னர், யோஷித ராஜபக்ஷ தொடர்பில், கடற்படையினரின் விசாரணை ஆரம்பிக்கப்படும் எனவும் அதுவரையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் படைத்தரப்பு அறிவித்துள்ளது.

கடற்படையின் கெடெட் அதிகாரியாக அவர் சேர்வதற்கான தகுதிகள் இருந்தனவா? அவை தொடர்பில் படைத்தரப்பு ஆய்வு செய்துள்ளதா? மற்றும் அவரது கடவுச்சீட்டு ஆகியன தொடர்பிலேயே, கடற்படையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல், கடற்படையிலிருந்து யோஷித ராஜபக்ஷ, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் மீதான நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளைத் தொடர்ந்து, கடற்படையின் விசாரணைகள் ஆரம்பிக்கும் என்றும் படைத்தரப்பு மேலும் அறிவித்துள்ளது.

By

Related Post