Breaking
Mon. Dec 23rd, 2024

– சையது அலி பைஜி –

சார்லி ஹெப்டோ என்ற பிரான்சை சார்ந்த கேலி சித்திர பத்திரிகை கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் மிக பெரிய கொந்தளிப்புகளை உருவாக்கியது.

ஆம், முஸ்லிம்கள் உயிருக்கு உயிராய் மதிக்கும் நபிகள் நாயகத்தை பல்வேறு கால கட்டங்களில் கேலி சித்திரமாக வரைந்து முஸ்லிம்களின் உணர்வுகளோடு விளையாடியது.

இப்படி முஸ்லிம்களை விமர்ச்சிப்பதையும் நபிகள் நாயகத்தின் ’கேலி சித்திரங்களை வெளியிட்டு முஸ்லிம்களை வெறுப்பு ஏற்றுவதையுமே தொழிலாக கொண்டிருந்து சார்லி ஹெப்டோ தற்போது இனிவரும் காலங்களில் நபிகள் நாயகம் தொடர்ப்பாக எந்த கேலி சித்திரங்களை வரைய மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு சார்லி ஹெப்டோவின் தலைமை ஓவியர் இனி நபிகள் நாயகம் பற்றி எந்த கேலி சித்திரத்தையும் வரையபோவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

தற்போது அந்த பத்திரிகையின் நிர்வாகமே
எதிர்காலத்தில் முஹம்மது நபியை (ஸல்) கேலி செய்யும் விதத்தில் எந்த கேலி சித்திரத்தையும் வெளியிட மாட்டோம் என்ற கொள்கை முடிவை அறிவித்திருப்பது வரவேற்ப்புக்குரியதே.

Related Post