Breaking
Sun. Dec 29th, 2024
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை களமிறக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற கூட்டத்தில் அக் கட்சியின் தேர்தல் ஆணையகம்  ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பது தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதி இருபது உறுப்பினர்களை கொண்ட தேர்தல் கமிட்டி நியமிக்கப்பட்டிருந்தது.   இந்த நிலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரைக் களமிறக்குவது, தேர்தல் கொள்கை, வேறு கட்சிகளின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சிறிகொத்தவில் வைத்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.   இதன் போது ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானித்திருப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை ஏனைய கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக பிரதான ஐக்கிய தேசியக் கட்சியானது யானைச் சின்னத்தை விட்டுக்கொடுக்க தயாராகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Post