Breaking
Thu. Nov 14th, 2024

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் மே மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா செல்லும் அரசாங்கத்தின் உயர் மட்ட குழுவில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் இடம்பெறுகின்றார்.

துறைமுக நகர் விவகாரம் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னரான சூழ்நிலை என்பவை இந்த விஜயத்தில் முக்கிய விடயங்களாக இந்தியா கவனத்தில் கொள்ளவுள்ளது.

கடன்களுக்காக பங்குகளை விற்பணை செய்வதற்கான சீனாவின் யோசணை மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் துறைமுக நகர் திட்ட ஒப்பந்தத்தின் ஊடாக சீனாவிற்கு வழங்கப்பட்ட கடல் மற்றும் ஆகாய உரிமைகள் தொடர்பில் இந்தியா கடுமையாக கவனம் செலுத்தியிருந்த நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் போது குறித்த துறைமுக ஒப்பந்தத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அந்த திருத்தங்கள் குறித்து முழுமையான விபரங்களை அறிவதில் இந்தியா மிகவும் ஆர்வாமாக உள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் உயர் மட்ட குழு அடுத்த மாத இறுதியில் டில்லிக்கு செல்கின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அரசின் முக்கியஸ்தர்களையும் இலங்கை குழு சந்திக்கவுள்ளது.

By

Related Post