பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கும் தேசிய ஷுறாசபையின் நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாக, தேசிய ஷுறா சபைப் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, செவ்வாயன்று (11.11.2014) மாலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஏதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள், அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பாக எதிர்க்;கட்சித் தலைவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
முஸ்லிம்களுக்கெதிரான இனவாத நடவடிக்கைகள், சகவாழ்வு – மீள்இணக்கம், கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைகள், வடக்கு முஸ்லிம்களது மீள்குடியேற்றம், தேசியப் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் இவற்றுக்கு சாதகமாக பதிலளித்தார்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கும் இத் தொடரில், ஆளும் கட்சி உட்பட முக்கிய தலைவர்களை தேசிய ஷுறா சபை சந்திக்கவுள்ளது. (mn)