Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கையின் முன்னணி பாதணி உற்பத்தி நிறுவணமான டி சம்சன் என்ட் சன்ஸ் நிறுவணத்தின் ரண்பா பாதணிகளில் அல்லாஹ் என்ற அறபு எழுத்தை ஒத்த வடிவமைப்புக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அச்சடிக்கப்பட்ட பாதணிகள் சந்தைக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளதினால் முஸ்லிம்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

புதுவருடப் புத்தாண்டுக்காக செய்யப்பட்ட இப்பாதணிகளிலேயே இவ்வாறான அறபு வடிவமைப்புக்கள் காணப்பட்டுள்ளன.

இப்பாதணிகள் தொடர்பில் டி சம்சன் என்ட் சன்ஸ் நிறுவனத்திடம் முஸ்லிம்கள் கடந்த வாரம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இது தொடர்பில் தற்போது குறித்த நிறுவணம் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரி அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு இன்று (22ம் திகதி) கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

புதுவருடத்திற்கு செய்யப்பட்ட பாதணிகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் திட்டமிட்டு செய்யப்பட்டதொன்றல்ல என இக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள இந் நிறுவனம் இது தொடர்பில் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் சந்தையில் உள்ள பாதணிகளை அகற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் அரபு எழுத்துக்களை ஒத்த வடிவமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள இப்பாதணிகள் நாட்டின் எல்லாபாகங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்பாதணிகளை உடன் அப்புறப்படுத்துமாறு முஸ்லிம்கள் குறித்த நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

By

Related Post