Breaking
Sun. Dec 22nd, 2024

‘ரண் மாவத்’ அபிவிருத்திப் பணிகளின் கீழ் அம்பாறை 3ஆம் வீதி – முதலாம் குறுக்குத் தெரு – மகளிர் பாடசாலை வீதிகளின் 1150 மீற்றர் காபட் இடும் பணிகள் வேலைத்திட்டம் இன்று (14.06.2019) பி.ப. 1.30 மணிக்கு (ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து), பிரதேச சபை உறுப்பினர் றியாஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் வேலைத்திட்டத்தினை ஆரம்பம் செய்யும் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் கலந்து சிறப்பித்ததுடன் அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர்களான ஏ. அச்சி முஹம்மட், ஏ.எல்.எம். ஜிப்ரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் சட்டத்ரணி யூ.எல்.எம். சமீம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினரால் வேலைத்திட்ட பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்யப்படுவதனையும் படங்களில் காணலாம்.

Related Post