Breaking
Sun. Dec 22nd, 2024

அரசாங்கத்தின் ரன் மாவத் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வழிகாட்டலில் கீழ் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5.4 கிலோ மீற்றர் வீதியை காபட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம் நேற்று புதன்கிழமை மணிக்கூட்டு கோபுர சந்தியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.

அதிதிகளாக ஒட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்ட மிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அறுபத்தி இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஓட்டமாவடி ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி, மீறாவோடை பொது சந்தை வீதி, மீராவோடை பாடசாலை வீதி, கறுவாக்கேணி வீதி, ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க வீதி ஆகியன 5.4 கிலோ மீற்றர் காபட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

Related Post