சையது அலி பைஜி
ரமழான் நோன்பின் அமைப்பினால் கவரபட்டு தன்னை .இஸ்லாத்தில் இணைத்து கொண்ட உக்ரைன் நாட்டு ஆய்வாளர் ஆர்த்தர். ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்பின் அமைப்பினால் கவரபட்டு உக்ரைன் நாட்டை சார்ந்த ஆர்த்தர் என்ற இளைஞர் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார் இது பற்றி அவர் கூறும்போது நான் பல்வேறு மதங்களை பற்றி ஆய்வு செய்தேன்.
நான் ஆய்வுக்கு எடுத்து கொண்ட மதங்களில் இஸ்லாமும் ஒன்றாக இருந்தது. இஸ்லாத்தின் பல்வேறு வழிகாட்டுதல்களை இஸ்லாம் அல்லாத மதங்களோடு நான் ஒப்பிட்டு பார்த்தபோது இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதை என்னால் உணர முடிந்தது.
அதுவும் ரமழான் நோன்பு என்பது மனித சமூகத்தை தவறான உணர்வுகளில் இருந்தும் தவறான சிந்தனைகளில் இருந்தும் விலக்கி நிறுத்தும் ஒரு அற்புத செயலாக அமைந்துள்ளதையும் முஸ்லிம்கள் நோன்பு வைக்கும்போது அவர்களது ஒவ்வொரு உறுப்புகளும் தவறான செயலில் இருந்து விலகி இருப்பதையும் நான் உணர்ந்து கொண்டபோது இஸ்லாத்தை தழுவுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. அது போல் முஸ்லிம்கள் மத்தியில் உணர்வு ரீதியாக ஒரு சர்வதேச ஒருங்கிணைப்பு இருப்பதையும் என்னால் உணரமுடிந்தது.
முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் இடையே ஒரு ஒன்றுபட்ட மொழி இல்லை என்றாலும் அவர்கள் முஸ்லிம் என்ற உணர்வால் ஒன்று பட்டு நிற்பதை நான் உணர்ந்து கொண்ட போது உலகில் இஸ்லாத்திற்கு மாற்றாக எந்த மதமும் இல்லை என்பதை நான் உணர்ந்து கொண்டு என்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.