ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சார்க் வலய அங்கத்தவ நாடொன்றின் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வருந்தத் தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக ஆப்கானிஸ்தானின் ஜனநாயகத்தை சீர்குழைக்க முடியாது என என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நாட்டின் செயற்பாடுகளை ஸ்தம்பிதமடைய செய்யும் முயற்சியாக இது அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.