ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை தனியார்த்துறையினருக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கையெடுத்து வருவதாக அகில இலங்கை ரயில்வே ஊழியர்களின் பொதுச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டமானது ரயில்வே துறையினரை தனியார் மயப்படுத்துவதற்கான ஆரம்பம் என சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ் பீ விதானகே தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவைத்துறையில் ஏராளமான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை கையளிக்க ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை ரயில்வே ஊழியர்களின் பொதுச் சேவைகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை தாம், தனியார் துறையினரை ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையில் இணைப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை மாத்திரமே மேற்கொண்டதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.
அத்துடன், இது குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.