Breaking
Sun. Mar 16th, 2025

கிளிநொச்சி 155ஆம் கட்டை ஆனந்தநகர் பகுதியில் சனிக்கிழமை (01) காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆறு பிள்ளைகளின் தந்தையான (54) சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தபால் ரயிலில் சிக்குண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

By

Related Post