Breaking
Mon. Mar 17th, 2025

கொழும்பு, கொட்டாஞ்சேனை புளுமென்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், இன்று திங்கட்கிழமை(03) அதிகாலையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிரோஷன் சம்பத் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

புளத்சிங்ஹள நிரோஷன் சம்பத் என அழைக்கப்படும் இவர் 36 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பத்தில் காயமடைந்த மேலும் ஐந்து பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை(31) கொழும்பு, கொட்டாஞ்சேனை, புளூமெண்டல் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதன்போது, பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் மேலும் 12பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Post