Breaking
Mon. Dec 23rd, 2024

முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாச மற்றும் சந்திரிக்கா குமாரணதுங்க ஆகியோர் ஜனாபதியில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் செயற்பட்டதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர்,அமைச்சர் றிசாத் பதியுதீன் அவரது மறைவிற்கு பின்னர் தலைவராக வந்த ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் பொடு போக்குடன் நடந்து கொண்டார் என்றும் கூறினார்.

திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதிரத்து வரிப்பொத்தாஞ்சேனையில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று பேரம் பேசும் சக்தியினை இழந்துவிட்டதாகவும்,இவர்கள் இந்த தேர்தலில் ஒரு ஆசனத்தையே பெறுவார்கள் என்றும் சொன்னார்.மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இந்த கட்சியினை உருவாக்கி இம்மக்களுக்கு எதனையெல்லாம் பெற்றுக்கொடுக்க முடியுமோ அதனை பெற்றுக்கொடுத்துவந்தார்.ஆனால் அவரது மறைவின் பின்னர் இந்தக்கட்சியின் சாரதியாக அமர்ந்த ஹக்கீம் எதனை செய்து கொடுத்துள்ளார்.
அவரது 15 வருட தலைமைக்காலத்துக்குள்,வெறும் உரிமைகள் என்று பேசி பேசி காலத்தை ஓட்டியதுடன்,பாராளுமன்ற கதிரைகளை சூடாக்கியதை தான் செய்தார்.அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியினை தீர்மாணிக்கும் கட்சியாக இருந்தது,இன்று இவர்கள் எந்த ஆட்சிக்கும் தேவையற்ற பலமில்லாதவர்களாக மாறிவிட்டனர்.

கடந்த இரு ஜனாதிபதி தேர்தலிலும்,மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வரவிடாமல் இருப்பதற்கு ஜக்கிய தேசிய கட்சிக்கு உதவி செய்தார்,மஹிந்த வென்றார்,கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவா,மைத்திரியா என்று இருந்த போது நாங்கள் மைத்திரிதான் வெல்ல வேண்டும் என்று தபால் வாக்களிப்புக்கு முன்னைய தினத்தில் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வாக்களிக்குமாறு வேண்டினோம்.ஆனால் ரவூப் ஹக்கீம் அன்றைய தினத்தில் வேண்டினார்.மனசாட்சி படி வாக்களியுங்கள் என்று.தையரியமாக துணிந்து சமூகத்திற்காக தீர்மானங்களை எடுக்க முடியாத கோழதை்தனமான அரசியல் தலைதை்துவங்கைள நாம் நம்பி இனியும் ஏமாந்துவிடக் கூடாது,

பசியால்,பட்டினியால் வாடுகின்ற ஒருவனுக்கு உணவை கொண்டு கொடுப்பது தான் தத்துவ ரீதியிலி நியாயப்படுத்தப்படக் கூடிய காரணமாக இருக்கும்,மாறாக இன்று இந்த காங்கிரஸ் அம்மக்களுக்கு ஏதையெல்லாம் பெற்றுத் தருவதாக பிதற்றுகின்றது.இவ்வளவு காலமும் எதனையும் பெற்றுத்தராத ரவூப் ஹக்கீம் இன்னும் எதனையாவது சரி பெற்றுத் தருவார் என்று இலவு காத்த கிளி போல் வாக்காளர்கள் இருப்பீர்கள் என்றால்,உங்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்..

அஸ்ரப் அவர்கள் இந்த கட்சியினை ஆரம்பித்து கூட்டங்களுக்கு செல்கின்ற போது அவரை நோக்கி கற்கள் வந்தன.இருந்த போதும் தமது பணியினை செய்தார்.இன்றும் அதே வேளையினை இறக்காமத்திலும்,அட்டாளைச் சேனையிலும் செய்கின்றனர்.கூட்டங்களை குழுப்புவதற்கு அடியாற்களை கற்கள் சகிதம் இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனுப்புகின்றது.

இந்த கற்களுக்கு நாம் பயந்தவர்கள்,அல்ல சத்தியத்தினையும்,நேர்மையான அரசியலினையும் மக்களுக்கு கொண்டு செல்லும் பணிக்கு எதிராக வரும் அனைத்து சவால்களையும் அல்லாஹ்வின் உதவி கொண்டு எதிர் கெள்ள தாயராகவுள்ளோம்.இந்த நாட்டில் உள்ள 23 இலட்சம் முஸ்லிம்களின் எதிர் காலதிதை தனிப்பட்ட சுயலாபங்களுக்காக அடகு வைக்கும் கைங்கரியத்திற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்.

எமது முஸ்லிம்களுக்கு எதிரதக மேற்கொள்ளப்பட்ட எத்தனையோ சதி தொடர்பில் இந்த கட்சிகள் எதனையும் பேசவில்லை.வில்பத்து காட்டினை முஸ்லிமகள் அழிக்கின்றனர்,சட்டவிரோதமாக குடியேற்றப்படுகின்றனர் என்றெல்லாம்,சிங்கள கடும் போக்கு சக்திகள் செயற்பட்ட போதும்,இந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்த்திற்கு எதிராக வந்த தாக்குதல்களையும் முறியடிப்பதற்கு முஸ்லிம்களின் கட்சி என்று மார்தட்டிக் கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதனை செய்து காட்டியுள்ளது என்று கேட்கவிரும்பகின்றேன்.

கட்சி என்பது மதம் அல்ல,அதனது சின்னம் விசுவாசிக்கும் ஒன்றுமல்ல,அதனை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் வேளையினை செய்ய முடியாது,மனிதர்களின் நலனுக்காக கட்சியும் அதனைது செயற்பாடுகளும் இல்லை என்றால். அதனை வைத்து நாம் பூஜிப்பதில் என்ன பலனிருக்கின்றது.இந்த நிலையில் திகாமடுல்ல மாவட்ட மக்கள் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நோக்கி நாளுக்கு நாள் படையெடுகின்றனர்.அங்கத்தவர்களாக எமது கட்சியில் சாரிசாரியாக வந்து இணைகின்றனர்.இது தான் நாம் மக்களுக்கு நாம் செய்யும் நன்மையின் பிரதிபலனாகும்.

இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்தின் குரல் வலையினை நசுக்கி அடிமை வாழ்வினை வாழச் செய்வதற்கு சிங்கள கடும் போக்கு அமைப்புக்கள் செயற்பட்ட போது அதனை அடக்கி மக்களை அச்சமற்ற சூழலில் வாழ்வதற்கான உத்தரவாதத்தை தாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோறினோம்.அரசுக்குள்ளும்,அமைச்சரவைக்குள்ளும் இருந்து போரடினோம்.ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இப்படியானவர் தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடவந்துள்ளார்.இவரை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதில் சில முஸ்லிம் வேட்பாளர்கள் முயற்சிக்கின்றனர்.அது வெறும் கனவாகும்,மஹிந்த ராஜபக்ஷவின் ஏஜெண்டுகளாக செயற்படும் நபர்கள் இந்த கொன்தராத்தினை பாரமெடுத்துள்ளனர்.இவர்களுக்கு மக்கள் நல்ல பாடத்தை புகட்ட வேண்டும் என்றும் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

Related Post