ரஷ்யா இஸ்லாம் வளமுடன் வளர்ந்து வந்து மண்ணாகும் இடையில் அங்கு ஏர்பட்ட கம்யுனிச அடக்குமுறைகளால் இஸ்லாம் அந்த மண்ணில் கடுமையான அடக்கு முறைகளை எதிர் கொண்டது.
கம்யுனிச ஆட்சியாளர்களால் அடுக்கடுக்கான அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விட பட்டபோதும் அந்த மண்ணில் இருந்து அவர்களால் இஸ்லாத்தை அப்புற படுத்த முடியவில்லை.
இஸ்லாம் தனது தனி தன்மைகளால் ரஷியாவில் பிரகாசித்து கொண்டி இருக்கிறது. அண்மையில் ஐரோப்பாவிலேயே மிக பெரிய இறை இல்லம் ஒன்று மாஸ்கோவில் திறந்து வைக்கபட்டது.
1904 ஆம் ஆண்டு கட்ட பட்ட இந்த இறை இல்லம் 2005 ஆம் ஆண்டிலிருந்து 170 மில்லியன் டாலர் செலவில் புதிப்பிக்க பட்டு வந்தது அதனுடைய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து சில தினங்களுக்கு திறந்து வைக்க பட்டது.
பத்தாயிரம் பேர் நின்று தொழும் அளவிற்கு அந்த இறை இல்லம் விரிவனதாகும். இந்த நிகழ்வில் ரஷ்ய அதிபர் புட்டின் துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் மற்றும் பாலஸ்தீன் அதிபர் மஹ்முத் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.