கடந்த ஆண்டு ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையில் கிளம்பிய இராஜதந்திர சர்ச்சைக்கு பிறகு, ரஷ்யாவிலிருந்து முதல் சுற்றுலா பயணிகள் விமானம், துருக்கியின் சுற்றுலா தலமான ஆன்தலியா சென்றடைந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து, ரஷ்யாவில் இருந்து துருக்கிக்கான சுற்றுலா நடவடிக்கைளுக்கு தடை விதிக்கப்பட்டது.
துருக்கி அதிபர் ரசிப் தேய்ப் எர்துவன் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளதாக மாஸ்கோ கூறியதற்கு பிறகு, கடந்த வாரம், ரஷ்ய அதிபர் புடின் அந்த தடையை நீக்கினார்.
தீவிரவாத தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்ட துருக்கி சுற்றுலா தொழிலில், ரஷ்ய சுற்றுலாவாசிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.