Breaking
Tue. Dec 24th, 2024

ரஷ்ய பல்கலைக்கழகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கை மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். 43 மாணவர்கள் கல்வி கற்கும் பல்கலைக்கழகத்திலேயெ இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் மலேசிய மற்றும் இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வந்துள்ளனர். தென் மேற்கு மொஸ்கோவிலுள்ள பிரோகோவ் மருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற இத்தீவிபத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான இலங்கை மாணவர் மொஸ்கோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தில் 5 இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post