ரஷ்ய நகரமொன்றில் பாரிய காளான் போன்ற உருவம் கொண்ட முகில் தோன்றியமை அந்நகர மக்களை அச்சமடையச் செய்தது.
மேற்கு சைபீரிய பிராந்தியத்திலுள்ள கேமேரோவோ நகரில் கடும் இடிமின்னலுக்கு மத்தியில் இந்த முகில் தென்பட்டது.
ஆனால், அணுகுண்டு வெடிப்புகளின் போது இத்தகைய பாரிய காளான் உருவிலான புகை ஏற்பட்டதை அறிந்திருந்த மக்கள், இந்த முகிலைக் கண்டு அச்சமடைந்தனராம்.
அந்நகருக்கு சற்று தொலைவிலுள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் ஏதேனும் வெடிப்பு ஏற்பட்டுவிட்டதோ எனவும் சிலர் அச்சம் கொண்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இடிமின்னல் காரணமாகவே இந்த விசித்திர முகில் உருவம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.