Breaking
Mon. Dec 23rd, 2024
ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தான் கவலையடைவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கிராமத்தில் பிறந்தவன் என்ற விதத்திலேயே தான் கவலையடைவதாக முன்னணி வானொலியொன்றின் நேர்காணலின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தனது கவலையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கவில்லை எனவும், தேர்தலுக்கு பின்னர் தான் இதுவரை அவருடன் கதைக்கவில்லை எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

சட்ட விதிகளுக்கு முரணான வகையில் ராஜபக்ச குடும்பத்தாரை பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாக இருந்தால், தான் அதற்கு எதிராக குரல் எழுப்ப தயாராகவுள்ளதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுடன் இணைந்து சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு குரல் எழுப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்சவை தான் இதுவரை சென்று பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிஷாந்த ரணதுங்க, யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹான் வெலிவிட ஆகியோரை நிச்சயமாக பார்வையிட செல்ல வேண்டும் என அவர் கூறினார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர்களை பார்வையிடுவதற்கு பெருந்திரளானோர் வருகை தந்த வண்ணம் உள்ளதாகவும், அதனால் ஆள் நடமாட்டம் குறைவடைந்ததன் பின்னரே செல்ல வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

By

Related Post