Breaking
Sun. Dec 22nd, 2024

தம்புட்டுகம ராஜபக்ஷ கிராமத்தில் ஆண், பெண் மற்றும் 14 வயதுடைய பெண் ஆகியோர் வெள்ளை உடையில் உலாவி வருவதாகவும் இதனால் பிரதேச மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து ராஜபக்ஷ கிராமத்தின் கிராம சேவகர் அசோகா தர்மகீர்த்தி கருத்து தெரிவிக்கையில்,

கிராமத்தில் பல பேர், இதே போன்று வெள்ளை உடையில் மர்ம உருவங்களை கண்டு அச்சமடைந்துள்ளனர். எனவே கிராமத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக சூனியக்காரர் ஒருவரை வரவழைக்க உள்ளோம்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு 50 வயதுடைய இந்திராவதி என்ற பெண் வழமை போன்று தனது பயிர்செய்கை நிலத்துக்கு நீரை திறந்து விடுவதற்காக நள்ளிரவில் தோட்டத்துக்கு சென்றுள்ளார்.

குறித்தப் பெண் சம்பவ தினத்தன்று மாமிசம் ஒன்றும் உண்டு இருக்கவில்லை. மேலும் அவருக்கு பேய் பற்றிய எவ்வித பயமும் இல்லை. எனினும் குறித்தப் பெண் பெரிய மர்ம உருவத்தை கண்டு அச்சமடைந்துள்ளார். மேலும் அவருடைய அடி பாதத்தில் நக கீறல்கள் காணப்பட்டுள்ளன.

தற்போது அந்த பெண் சுகயீனமடைந்துள்ளதாகவும் உணவு எதுவும் உண்பதில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே ராஜபக்ஷ கிராமத்தின் மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் இரவு நேரங்களில் வெளயில் செல்ல அச்சம் கொள்ளவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Post