உலக சுகாதார அமைப் பின் 2015 ஆம் ஆண்டுக் கான புகையிலை எதிர்ப்பு தின சர்வதேச விருதினை சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன வென்றெடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் உலக சுகாதார அமைப்பு அதன் 6 வலயங்களை உள்ளடக்கியதாக புகைத்தல் மற்றும் புகையிலைக்கு எதிராகச் செயற்படுவோரைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகின்றது. இந்த விருதுக்கு ‘உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் விருது’ என பெயரிடப்பட்டுள்ளது.
இம்முறை தென் கிழக்காசியாவுக்கான விருதை டாக்டர் ராஜித சேனாரத்ன பெற்றுக்கொண்டுள்ளார்.
புகையிலை பாவிப்புக்கு எதிராக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன முக்கிய நடவடிக்கைகளை மேற் கொண்டிருப்பதை அவதானிப்புக்கு உட்படுத்தியே இந்த விருது வழங் கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் புகையிலை பாவனையை ஒழிக்கும் திட்டத்துக்கமைவான (பிவிஹிஜி) உடன்படிக்கையில் 2003ஆம் ஆண்டு இலங்கை கைச்சாத்திட்டது. 2006ல் இதற்கமைய இலங்கையில் புகையிலை மற்றும் மதுசார ஒழிப்பு அதிகார சபை நிறுவப்பட்டது. 2008ல் அனைத்து வித புகையிலை உற்பத்திகள் பாவனையை கட்டுப்படுத்தும் சட்ட விதிகள் அங்கீ கரிக்கப்பட்டது.
2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி ஈட்டியதன் பின்னர் புகையிலை உற்பத்தி பக்கற்களில் 80 சதவீத எச்சரிக்கை விளம்பரத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மிக குறுகிய காலத்தில் எடுத்த இந்த துரித நடவடிக்கையை மெச்சும் வகையில் இவ்வருடத்துக்கான தென்கிழக் காசியாவுக்கான விருதை இலங்கை சுகாதார அமைச்சுக்கு வழங்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்தது.