Breaking
Mon. Dec 23rd, 2024

மியான்மரில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஜனநாயகத்துக்காக போராடி சுமார் 19 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுக் காவலில் இருந்த ஆங்கான்–சூகியின் குடியரசுக்கான தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து தேசிய லீக் கட்சி மியான்மரில் புதிய ஆட்சி அமைக்கிறது. தற்போதைய அரசின் பதவிக்காலம் வருகிற மார்ச் 31–ந் தேதி வரை உள்ளது. அதன் பின்னர் புதிய ஆட்சி அமையும்.

எனவே, தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய லீக் கட்சியை சேர்ந்தவர் புதிய அதிபராகும் வாய்ப்பு உள்ளது. இருந்தும் அக்கட்சி தலைவர் ஆங்சாங்–சூகி அதிபராக முடியாது. ஏனெனில் மியான்மர் சட்டப்படி வெளிநாட்டினரை திருமணம் செய்யும் அந்நாட்டு குடிமகனும் அவர்களது வாரிசுகளும் மிக உயரிய பதவி வகிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

ஆங்கான்–சூகி இங்கிலாந்தை சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளார். எனவே, அவரோ அவரது மகன்களோ அதிபர் பதவி வகிக்க முடியாது.

ஆனால் தற்போது ஆளும் ராணுவ ஆட்சியாளர்கள் நினைத்தால் ஆங்கான்–சூகி அதிபராக முடியாமல் தடுக்கும் 59(எப்) அரசியல் சட்டப் பிரிவை பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் தற்காலிகமாக நீக்க முடியும். ஆகவே ராணுவ தலைமை கமாண்டர் ஜெனரல் மின் ஆங்கியாங்குடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தற்போது பாராளுமன்றத்தில் குடியரசுக்கான தேசிய லீக் கட்சிக்கு போதிய அளவு மெஜாரிட்டி இருப்பதால், ஆங்கான்–சூகி அதிபராகும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதற்கிடையே, வருகிற மார்ச் 17–ந் தேதி அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பெயர் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுகிறது.

3 பேர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு அவர்களில் அதிக அளவு எம்.பி.க்கள் ஓட்டுகளை பெறுபவர் அதிபர் ஆவார். மீதமுள்ள 2 பேர் துணை அதிபர்களாக பதவி வகிப்பார்.

By

Related Post