Breaking
Tue. Dec 24th, 2024

இஸ்லாமிய அறிஞர்களின் சர்வதேச உறுப்பினரான
டாக்டர் ஆயிழ் கர்னீ அவர்கள் , பாலஸ்தீனர்களை நோக்கி பின்வருமாறு கூறிய செய்திகள் மகிழ்ச்சியை தருகின்றன.

உங்களது இடத்தை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் .இறைவன் மூலமாக வலிமை பெறுங்கள், அவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் .பிறகு உங்களின் மீது நம்பிக்கை வையுங்கள். ஏனெனில் இந்த உலகமோ மற்ற விடயங்களில் ஓய்வில்லாமல் பரபரப்பாக இருக்கின்றனர் . இன்னும் அவர்களுடைய விடயத்தில் அவர்களே எஜமானர்களாய் இருக்கின்றனர்

“ராணுவம் மற்றும் ஏவுகணைகள் செய்வதை, பாலஸ்தீனர்களின் எழுச்சியும் கற்களும் செய்துவிட்டன “டிவிட்டரில், அல் கர்னீ அவர்கள் கருத்து தெரிவித்தார்கள்

இந்த காலத்தின் போராட்டத்திற்கும், பொறுமைக்கும், விடாமுயற்சிக்குமான வரலாறு உங்களுடையதே!! நீங்கள் தான் வெற்றியின் சின்னங்கள்; சுதந்திரத்தின் நட்சத்திரங்கள்;

எழுச்சிமிகு இளைஞர்கள் , ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தை பெருமைப்பட வைதத்துள்ளனர். அல்லாஹ் (பாலஸ்தீனர்களாகிய) உங்களுக்கு வெற்றியை தரட்டும், இன்னும் ஆக்கிரமிப்பாளர்களாகிய யூதர்களுக்கு கடுமையான தண்டனையை தரட்டும்..

என் பாலஸ்தீன சகோதரர்களே!! துக்கப்படாதீர்கள் !

அல்லாஹ் உங்கள் பக்கம் இருக்கிறான். அல்லாஹ் உங்கள் பக்கம் இருந்தால், நீங்கள் எதற்கும் அஞ்ச தேவையில்லை. அல்லாஹ், எல்லா மாநிலத்தை விட, எல்லா நாட்டை விட, எல்லா அமைப்பை விட மிகப் பெரியவன். அல்லாஹ் உங்களோடு இருக்கிறான், எவரது உதவியும் தேவையில்லை; எந்தவித அழிவை இழப்பை நினைத்தும் அஞ்சாதீர்கள்.

“நான் சத்தியம் செய்கிறேன்!! என் பாலஸ்தீன சகோதரா்களே, வெற்றி சமீபத்தில் இருக்கிறது இன் ஷா அல்லாஹ்!! எவ்வளவு கடினமாகிறதோ அவ்வளவு நிம்மதி விரைவில் வரும் என்பதில் உறுதியாக இருங்கள். இன்னும் அல்லாஹ் மிக சமீபத்தில் உள்ளான்; நமது பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு , நமது வெற்றியை உண்மையாக்குவான்.என்று மேலும் கூறினார் .

By

Related Post