Breaking
Sun. Dec 22nd, 2024

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின் கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் அறையில் கண்காணிப்பு கமெரா உள்ளது. ஆனால், அது பழுதாகி இருப் பதால் தற்கொலை சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்தக் கமெரா எப்படி பழுதானது? திட்டமிட்டே அது பழுதாக்கப்பட்டதா என்பன போன்ற பல சந்தேகங்களை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் சிறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் சிறை, புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உட்பட 33 சிறைகளில் தற்போது கண்காணிப்பு கமெராக்கள் செயல்பாட்டில் உள்ளன.

மத்திய சிறைகளில் கைதிகளின் அறையைத் தவிர பொதுவாகக் கூடும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கமெராக்கள் உள்ளன.

கண்காணிப்பு கமெராவில் ஏதாவது பழுது ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு தகவல் தருவார்கள். அதிகபட்சம் 3 நாட்களுக்குள் கமெரா பழுது நீக்கப்பட வேண்டும்.

அப்படியிருக்கையில், கமெரா பழுதானால் அதனை எதற்காக பழுதுபார்க்கவில்லை? என்ற சந்தேகம் எழுந்துள்ளன.

 

By

Related Post