பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்தால், ஜனாதிபதி செலயகத்தை சுற்றி வளைப்போம் என ராவணா பலய அமைப்பின் அழைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் நேற்று தெரிவித்துள்ளார்.
சுமார் மூவாயிரம் பௌத்த பிக்குகள் ஜனாதிபதி செலயகத்தை சுற்றி வளைக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோன் தலைமயிலான பிரதிநிதிகளுடன் ராவனா பலய நேற்று (30) சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது.
இந்த சந்திப்பின்போது, சத்தாதிஸ்ஸ தேரர் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வதில்லை என ஜனாதிபதியின் செயலாளர் அபேகோன் உறுதியளித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.