மட்டக்களப்பு-ரிதிதென்ன அபுபக்கர் சித்தீக் ஜூம்ஆ பள்ளிவாயலின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இக்ரா குர்ஆன் மதரசாவின் பரிசளிப்பு விழா தலைவர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது.பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய ஒருங்கமைப்பாளருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான ரிதிதென்ன இக்ரா குர்அன் மதரசா மாணவா்களின் பல்வேறு பட்ட திறமைகளைப் பாராட்டி பிரதம அதிதி பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாMA/MP அவர்களினால் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இன்றைய நிகழ்வின் போது விசேட மார்க்கச் சொற் பொழிவு இடம் பெற்றதுடன் ரிதிதென்ன அபுபக்கர் சித்தீக் ஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவர் எஸ்எம்.தாஹிரினால் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.