Breaking
Sun. Dec 22nd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், ரிதீகம, வரகாவெஹர மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசல் பாதையின் அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிகுட்பட்ட  ரிதீகம பிரதேசத்திலேயே  இந்த பாதை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர், மக்கள் காங்கிரஸின் தொடங்கஸ்லந்த அமைப்பாளர் அஸ்வர் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் ஆகியோர்  இன்று (01)  அந்தப் பிரதேசத்துக்குச் சென்று அபிவிருத்தி செய்யப்பட்ட வீதியை பார்வையிட்டனர்.

 

Related Post