ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தினால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று (10) டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி சென்ற பத்திரிகையாளர்கள் பஸ் மீது சில நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
குறித்த தாக்குதலில் பஸ்ஸின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளது.இந்த தாக்குதலில் 12 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ டி ஜெனீரோ நகரில் பாதுகாப்பு படைகளை சேர்ந்த சுமார் 85 ஆயிரம் பேர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத் தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.