Breaking
Mon. Dec 23rd, 2024
ருஹுன பல்கலைக்கழகத்தின் சுகாதார கற்கைகளுக்கான மாணவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நேற்றுமுதல் சத்தியாக்கிரகத்தில் குதித்துள்ளனர்.

மாணவர்களின் பரீட்சைக்கான உரிமையை உறுதி செய்யுமாறும், பரீட்சைகளின் ஊடாக மாணவர்களை பழிவாங்கும் நிர்வாகத்தின் போக்கை கைவிட கோரியும் இணை சுகாதார கற்கைகளுக்கான மாணவர்கள் நேற்று காலி, கராப்பிட்டிய மருத்துவபீடத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

ஆர்பாட்டத்தின் முடிவில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்த மாணவர்கள், மருத்துவபீடத்தின் முன்பாக அமர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.

ருஹுணைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்தப் போராட்டங்களை ஒழுங்கு செய்துள்ளது.

ruhunu_uni_002

By

Related Post