மேல் மாகாண சபை உறுப்பினர் ரொஜர் செனவிரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிடியவால் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஸைத் அல்ஹுசைன் கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்திருந்தபோது, அவருக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதன் காரணமாக, பொலிஸாரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ரொஜர் செனவிரட்ன சமுகமளிக்காத காரணத்தாலேயே அவருக்கு குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக, கருவாத்தோட்ட பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.