Breaking
Sat. Sep 21st, 2024
மியான்மரில் இருந்து வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்ல முயன்றவர்களை நடுக்கடலில் மடக்கிக் கைது செய்துள்ளது மியான்மர் அரசு. மேலும் கடலில் அரசுக்கு தெரியாமல் ரகசியமாக கடலில் பயணிப்பவர்களை அந்நாட்டு கப்பல் படை தேடுவதால் பதற்றம் நிலவுகிறது.
மியான்மர் நாட்டில், அரசுக்கும் அங்கு வாழும் சிறுபான்மை மக்களுக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,  மியான்மரில் இருந்து ரோகிங்யா முஸ்லிம் இனத்தவர்கள் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிற்கு கடல் வழியாக குடிபெயர்ந்து செல்வதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அதனால் அவ்வாறு தப்பிச் செல்லும் நபர்களை அகதிகளாக ஏற்க அந்த நாடுகள் மறுக்கிறது. இதனால் அதில் உள்ள மக்கள் உணவு, குடிநீர் இன்றி நடுக்கடலிலேயே சாகும் நிலைக்குத்  தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சுமார் 3500 பேர் நடுக்கடலில் தத்தளித்து வருவதாகக்  கூறப்படுகிறது.
இவர்களை மீட்க மலேசியா மற்றும் இந்தோனேசியா அரசுகள் முடிவு செய்து, நடுக்கடலில் கப்பல் மூலம் தேடிவருகிறார்கள். இவர்களுடன் மியான்மர் கடற்படையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
இவர்கள் இன்று காலை சுமார் 727 பேர் நடுக்கடலில் சென்று கொண்டிருந்ததை பார்த்து,  உடனே கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மியான்மரின் வடக்குப்பகுதியில் உள்ள ரஹினே மாநிலத்தைச் சேர்ந்த ரோகிங்கியா முஸ்லிம் இனத்தவர்கள் என்று கூறப்படுகிறது.

Related Post