Breaking
Wed. Dec 25th, 2024
எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள ரோயல் கல்லூரி மாணவர்களின் நடைப்பயணம் ஒன்றில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளனர்.

செயற்கை நிறமூர்த்தங்கள் மற்றும் சுவையூட்டிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்களுக்குப் பதிலாக தண்ணீர் அருந்துதல், புகைப்பழக்கத்தை ஒழித்தல், போசாக்கான உணவுகளை மட்டும் தெரிவு செய்தல் ஆகிய மூன்று விடயங்களை வலியுறுத்தி இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ரோயல் கல்லூரியின் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

24ம் திகதி காலை ஏழுமணிக்கு நெளும்பொக்குண அருகில் ஆரம்பமாகும் நடைப்பயணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

வரலாற்றில் முதல் தடவையாக பாடசாலை மாணவர்களின் நடைப்பயணத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையவுள்ளது.

By

Related Post