Breaking
Sun. Dec 22nd, 2024

றப்பருக்கு ஒன்பது இனங்கள் உள்ளன. இங்கே நாம் ஒரு இனத்தோடு மட்டும் செயற்படுகின்றோம். றப்பர் ஆராய்ச்சி நிறுவனங்கள் இது தொடர்பான ஆராச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது நாம் ஏனைய எட்டு இனங்களை சேகரிக்க பெருவியன் நாட்டு அரசின் அனுமதியுடன் அமேசான் காட்டுப் பகுதிக்கு போகவுள்ளோம்.

இலங்கையில் முதல் முறையாக அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலக றப்பர் மாநாட்டின்; அங்குரார்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே சர்வதேச இறப்பர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சபையின் பொது செயலாளர் டாக்டர் அப்துல் அஸிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி நேற்று (28) வியாழக்கிழமை சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பெருந்தோட்ட கைத்தொழில் பிரதி அமைச்சர் கௌரவ குணசேகர, ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரி திரு பந்துல எகொடகே,மலேஷியா ‘Confexhub’ சர்வதேச நிகழ்ச்சி அமைப்பின் அங்கத்தவாகள், றப்பர் தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அரசு அதிகாரிகள் விசேட அதிதிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.

வரலாற்று ரீதியான இந்த சர்வதேச நிகழ்வினை கொழும்பில் நடத்த மலேஷியாவை தளமாக கொண்ட சர்வதேச நிகழ்ச்சி அமைப்பாளர்களான ‘Confexhub’ யினருடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினர் ஓர் இணை அமைப்பாளராக கூட்டிணைந்து ஒழுங்கு செய்துள்ளனர்.

இவ் அங்குரார்பண நிகழ்வில் டாக்டர் அப்துல் அஸிஸ் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:

1909 ஆம் ஆண்டு உலகின் முதல் முறையாக இறப்பர் ஆராய்ச்சி நிலையம் ஆரம்பிக்கபட்;ட போதே இலங்கையிலும் நிறுவப்பட்டது. 2009 முதல் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போது நான் இங்கே இருந்தேன்.

றப்பர் மரத்தில் பல ஆராய்ச்சி செய்யப்படுகிறது. உலக றப்பர் உற்பத்தியில் 70% சத வீதமானவை டயர் துறைக்கு செல்கிறது. றப்பர் சுகாதாரத்தினுடைய மத்திய கட்டத்திற்கு அதன் பங்களிப்பை வழங்குகிறது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால் றப்பருக்கு ஒன்பது இனங்கள் உள்ளன. இங்கே நாம் ஒரு இனத்தோடு மட்டும் செயற்படுகின்றோம். றப்பர் ஆராய்ச்சி நிறுவனங்கள் இது தொடர்பான ஆராச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது நாம் ஏனைய எட்டு இனங்களை சேகரிக்க பெருவியன் நாட்டு அரசின் அனுமதியுடன் அமேசான் காட்டுப் பகுதிக்கு போகவுள்ளோம். குறிப்பாக அடுத்த ஆண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

எனவே புதிய மரங்களினை எல்லைப் பகுதிகளில்; நடுதலும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளுக்கு இந்த புதிய இனங்களின் இருந்து நன்மைகளை நீங்கள் நினைத்து பாருங்கள். இந்த றப்பர் பயிர் தொடர்பிலான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திகளின் சமீபத்திய ஆய்வுகளை எதிர்வரும் உலக றப்பர் மாநாட்டின் போது அறிந்துக்கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. தற்போது றப்பர் விலை மிகவும் சாதகமாக இல்லை ஆனால் உங்ளுக்கு தெரியும் றப்பர் எப்போதும் பாச்சல் தன்மையை கொண்டது அதனை நாம் மீட்க முடியும் என்றார்.

Related Post