கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம் பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா பட்டாணிச்சூர் மதீனா வீதிக்கான புதிய கொங்ரீட் வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம் பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளருமான. றிப்கான் பதியுதீன் அவர்களும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக, வவுனியா நகர சபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப் அமைச்சரின் இனைப்பாளர் முத்து முஹம்மது, மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பயனாளிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்