Breaking
Sat. Dec 28th, 2024
எ.எச்.எம்.பூமுதீன் 
முஸ்லிம் சமுகத்தை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலமிழக்கச் செய்யும் சதித்திட்டங்கள் மகிந்த ஆட்சியுடன் முற்றுப் பெறாது இன்று வரை தொடர்வது முஸ்லிம் சமுகத்தினர் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் தோற்றிவித்துள்ளது.

2012ல் பொதுபலசேனாவின் அராஜகத்துடன் ஆரம்பித்த முஸ்லிம் சமுகத்திற்கு எதிரான அடக்குமுறைகளும் அட்டூளியங்களும் 2015ல் சிங்கள ராவயவின் மூலம் மேலும் வலுப்பெற்றுவருகின்றது.

பொதுபலசேனாவாகட்டும் அல்லது சிங்கள ராவய ஆகட்டும் இவர்களின் ஒரே குறிக்கோள் முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக அழிப்பதும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை இல்லாது ஒழிப்பதுமாகும்.

அரசியல் ரீதுpயான ஒழிப்பில் மேற்சொன்ன இனவெறி பிடித்த அமைப்புக்களால்; கூடுதலாக பாதிக்கப்பட்டவர் என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாத்தான் என்றால் அதற்கு மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

அவரது அமைச்சுக்குள் அத்து மீறி புகுந்தது மட்டுமன்றி அவரது மக்கள் வாழும் சொந்த தாயக பூமியையே பறித்தெடுக்கும் அந்த இனவாத அமைப்புக்களின் இனவெறியாட்டம் இன்று வiர் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

சிங்கள இனவெறி குழுக்களால் அன்று ஆரம்பிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்களுக்கு எதிரான சதி நடவடிக்கைகள் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் பண பலத்துடன் பல்கிப்பெருகி வடபுல முஸ்லிம்களின் காணிகளை அபகரிப்பது மட்டுமன்றி அந்த மக்களின் பிரதிநிதியான அந்த மக்களின் பிரதிநிதியான அதற்கு மேலாக அந்த மக்களின் பிரதிநிதியான ரிசாதை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதும் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

வடபுல முஸ்லிம்கள் மீள்குடியேறும் பட்சத்தில் அம்மக்களது சொந்த தாயக பிரதேசத்தில் காணப்படும் வழங்களை தம்மால் எதிர்காலத்தில் அபகரித்துக்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அம்மக்களை அப்பகுதியில் மீள்குடியேறவிடாமல் தடுக்கும் ஒரு செயற்பாடே இன்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள வில்பத்து எனும் போலிப் பிரச்சாரமாகும்.

ரிசாதைப் பொறுத்த வரையில் இலங்கை முஸ்லிம்களால் துணிச்சல் மிக்க முஸ்லிம் தலைவராக பார்க்கக் கூடிய நிலை தோற்றம் பெற்றுள்ளது.

அஸ்ரப் அன்று எவ்வாறு எந்தவொரு அற்ப சொற்ப சலுகைகளுக்கும் அடிபணியாமல் தன் சமுகம் சார்ந்து செயற்பட்டாரோ அதே ஒத்த அளவில் ரிசாதும் செயற்படுவது முஸ்லிம் சமுகத்தின் அரசியல் செயற்பாட்டை ஒழிக்க நினைக்கும் எதிரிகளுக்கு பெரும் காழ்ப்புணர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

.
அதற்கு அமைய அன்று அஸ்ரபை அழித்தொழித்தது போல் ரிசாதையும் ஒழித்துக் கட்டும் சூழ்ச்சிகள் இன்று பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்விமான்களாலும் உலமாக்களாலும் பரவாக பேசப்பட்டு வருகின்றது.

இதன் முதற்படியாகவே வில்பத்து விவகாரத்தை கையில் எடுத்துள்ளது அந்த காழ்ப்புணர்ச்சி கொண்ட சதிக் கூட்டம்.

இதற்கு உறுதுணையாக சிங்கள இனவாதிகள் மட்டுமன்றி முஸ்லிம் சமுகம் சார்ந்த ஒரு சிலரும் துணை போயிருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளமையானது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் சார்பான புலம்பெயர்ந்த தமிழர்களின் வரப்பிரசாதங்களுக்கு துணைபோன முஸ்லிம் சமுகம் சார்ந்த அரிசயல் பிரமுகர் ஒருவரினதும்,; ஓரிரு முஸ்லிம் ஊடகவியலாளர்களும் ரிசாதை அழிக்கும் இந்த சதிக் கூட்டத்தின் சதி வலைக்கு துணைபோயிருப்பது தற்போது மெல்லக் கசிந்துள்ளன.

பாராளுமன்றம் கலைக்கபப்பட்டால் தனது அரசியல் எதிர்காலம் பூச்சியமாகிவிடும் என்று கருதும் வன்னியைச் சேர்ந்த ஒருவரே ரிசாதை ஒழித்துக் கட்டும் புலம் பெயர் தமிழர்களின் பிரதான ஏஜண்டாக செயற்பட்டு, மேற்சொன்ன சதித் திட்டத்திற்கு தலைமை வகித்து வருகின்றார் என்ற உண்மையும் அம்பலத்திற்கு வந்துள்ளது.

அவரது துணையுடன் வன்னியைச் சேர்ந்த மேலும் அதிகார பதவி கொண்ட இருவரும் உள்ளடங்குவது வன்னி முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமன்றி அரசியல் ரீதியான செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் முஸ்லிம் சமுகம் சார்ந்த கல்விமான்கள் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை மேலும் தோற்றுவித்துள்ளது.

இதற்கமைய ரிசாதை ஒழித்துக் கட்டும் நடவடிக்கை வில்பத்து விவகாரத்தின் ஊடாக கட்சிதமாக நிறைவு பெறும் பட்சத்தில் மேற்சொன்னவரின் அரசியல் எதிர்காலம் பாராளுமன்றக் கலைப்புடன் முற்றுப்பெறுவதால்  கலைப்புடன் நிறைவு பெற்றாலும் அவரை ஐரோப்பிய நாடொன்றிக்கு குடும்ப சகிதம் அழைத்து வாழ்விட அனுமதியைப் பெற்றுக் கொடுக்கவும் விரிவாக பேரம் பேசப்பட்டுள்ளது.

இதற்கு முன்னோடியாக பல ஆயிரம் யூரோக்கள் முற்பணமாக செலுத்தப்பட்டுள்ளமையும் தற்போது ஆதாரபூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த பேரம் பேசும் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக புலம் பெயர்ந்த தமிழர்களின் அழைப்பின் பெயரில் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சதித் திட்ட கலந்துரையாடல் ஒன்றுக்காக குறித்த வன்னி முஸ்லிம் அரசியல் பிரதிநிதி இரு தடவைகள் பிரித்தானியா சென்று வந்துள்ளமையும் மேலும் அதிர்ச்சியூட்டும் அம்பலமாக வெளிவந்துள்ளது (இதற்கு அவரது கடவுச் சீட்டு ஆதாரமாகவுள்ளது).

ரிசாதினால் அறிமுகப்படுத்தப்பட்ட குறித்த அந்த சதிகார நபருக்கு குறித்த சதி நடவடிக்கைக்குரிய ஆக்கபூர்வமான சதித்திட்டங்களை போதித்தது தற்போதைய அரசியல் பிரமுகராக செயற்படும் ஊடகம் ஒன்றின் பணிப்பாளரான ஒரவரும் அந்த பணிப்பாளரின் நெருங்கிய சகாவான முன்னாள் அதிகாரத் தலைவரின் புதல்வருமாகும்.

மேற்சொன்ன குறித்த வன்னி அரசியல் பிரமுகரின் தலைமையின் கீழ் தங்களை தாங்களே ஊடக சமுகத்தினர் என்று பறைசாற்றிக் கொள்ளும் முஸ்லிம் ஊடகவியலாளர் ஓரிவரும் துணைபோயிருப்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் அச்சு ஊடகம் ஒன்றில் பணியாற்றும் முஸ்லிம் ஊடகவியாலளர்கள் இருவரே அவ்வாறு துணைபோயுள்ளனர்.

இவர்களுக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா ரீதியில் கடந்த 06 மாதங்களாக வழங்கப்பட்டு வருகின்றது.

இவர்களது பிரதான பணி ரிசாதுக்கு எதிராக போலியான பேஸ்புக் கணக்குகளை திறந்து அவருக்கு எதிராக கருத்துக் கூறுவதும் மேற்சொன்ன வன்னி அரசியல் பிரமுகருக்கு ஆதரவாக துதிபாடுவதுமே ஆகும்.

இதற்காக இவர்களுக்கு பெறுமதி மிக்க கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணனிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது வேலை பார்க்கும் இடங்களிலிருந்து அவர்கள் விலகிக்கொள்ளும் பட்சத்தில் அவர்களையும் ஐரோப்பிய நாடொன்றுக்கு அழைத்துச் செல்வது என்றும் மேலும் பேரம் பேசப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக குறித்த வன்னி அரசியல் பிரமுகர் சார்ந்த ஒருவருக்கு மேற்பந்தியில் குறிப்பிட்டுள்ள ஊடப்பணிப்பாளர், தான் சார்ந்த ஊடக நிறுவனத்தின் வன்னி பிரதேச நிரூபர் அந்தஸ்தை; பெற்றுக் கொடுத்திருப்பதுடன் அந்த பிரதேச நிரூபருக்கு வீடியோ கருவிகளை பாவிக்கும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கும் பொறுப்பு மேற்சொன்ன அந்த இரு முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

.
இது இவ்வாறிருக்க மேற்சொன்ன இரு முஸ்லிம் ஊடவியலாளர்களின் பணப்பரிமாற்றம் மற்றும் அவர்களின் தொலைபேசி விபரப்பட்டியல்கள் தொடர்பான தகவல்கள் தற்போது கொழும்பில் உள்ள மிக மிக முக்கியமான பிரமுகரின் கையில் அகப்பட்டுள்ளது என்ற தகவலும் அம்பலத்திற்கு வந்துள்ளது.

, மேற்சொன்ன முஸ்லிம் ஊடகவியலாளர்களால் 20க்கு மேற்பட்ட போலி பேஸ்புக் கணக்குகளும்;; மேலதிகமாக ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த கணக்குகள் வன்னி அரசியல் பிரமுகரின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த வன்னி அரசியல் பிரமுகருக்கு மேலதிகமாக நாம் ஏற்கனவே கூறிய வன்னி அரசியல் அதிகார பதவிமிக்க இருவரும் இதுவரை வில்பத்து தொடர்பில் எதுவித கருத்துக் கூறாமல் மௌனம் காப்பதும் முஸ்லிம்கள் மத்தியில் சந்தேகத்தை தோற்றிவித்துள்ளது.

எனவே சிங்கள இனவாத அமைப்புக்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் இனவெறியாட்டத்திற்கும் பணத்திற்கும் அற்பசொற்பசலுகைகளுக்கும் துணைபோய் நிற்கும் வன்னி முஸ்லிம்களுக்கு துரோக அரசியல் செய்யும் மேற்சொன்ன எம்பியினதும் அவரது சகபாடிகளான அரசியல்வாதியும் ஊடகபணிப்பாளருக்கும் அந்த பணிப்பாளரின் நெருங்கிய சகவான முன்னாள் அதிகாரத் தலைவரின் புதல்வருக்கும் சாட்டையடி கொடுக்க முஸ்லிம் சமுகம் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயமாகும்.

மறிச்சிக்கட்டியை பாதுகாக்க மடித்துக் கட்டிக்கொண்டு நிற்போம்

Related Post