இலங்கை அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்டு வந்த மூதுார் தொகுதி இன்று அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவைராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் கைமாறி போகின்ற நிலையினை காணமுடிந்தது.நேற்று மூதுாரில் எற்பாடு செய்யப்பட்டிருந்த ஜக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கலந்து கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அரசியல் பிரவேத்துடன்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயிர் நாடி என்று சொல்லும் பிரதேசமாக மூதுார் இருந்து வந்தது.இருந்த போதும் பிற்பட்ட காலப்பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இப்பிரதேச மக்களுக்கு எந்தவித அபிவிருத்திகளையும் செய்யவில்லை என்றும் தனிப்பட்ட ரீதியில் அவர் அதிக நன்மையினை மட்டும் அடைந்துள்ளதாக இப்பிரதேச கட்சியின் ஆதரவாளர்கள் நேரடியான குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
இதனால் கட்சியில் ஒரு மாற்றம்,தலைமைத்துவத்தில் ஒரு மாற்றம் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை ஆதரிக்கும் முடிவினை இம்மக்கள் எடுத்துள்ளனர்.நேற்று இரவு இடம் பெற்ற இந்த பிரசாரக் கூட்டத்தினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர் தௌபீக் ஏற்பாடு செய்திருந்தார்.
மூதுார் வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை விட பலமடங்கு ஆதரைவாளர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேறி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் வந்துள்ளனர்.
நேற்றைய மக்கள் வெள்ளம் திருகோணமலை மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற பிரவேசத்தை உறுதிப்படுத்தியுள்ளது.திருமலை மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் பட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் அப்துல்லா மஹ்ரூபின் வெற்றிக்காக புல்மோட்டை மற்றும் மூதுாரில் இடம் பெற்ற கூட்டம் மக்கள் ஆளும் கட்சியிக்கு ஆதரவு அளித்து தமக்கு கிடைக்காமல் செய்யப்பட்ட அந்த உரிமைகளையும்,சலுகைகளையும் அனுபவிக்கும் சந்தர்ப்பமாக பார்க்கின்றதை நாம் இந்த வேளையில் நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மூதுார் தொகுதி வாக்காளர்கள் அதிகப்படியான வாக்குகளை அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு வேட்பாளரை வெற்றியடையச் செய்வார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகும் உண்மையாகும்.