Breaking
Tue. Nov 19th, 2024

முஸ்லீம் சமூக விடயங்களில் தமிழ் கூட்டமைப்பு நியாயமாக நடக்கவில்லை.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் வட மாகாண சபை அணுவளவு உதவிகளையும் புரியவில்லை.வடக்கும் கிழக்கும் இணையவே கூடாது.
வடக்கு முஸ்லீம் அகதிகள் விடயத்தில் அரசு, குருடர்களாகவும் செவிடர்களாகவும் உள்ளது.ஜனாதிபதி முறை ஒழிக்கப்படக்கூடாது.52 அமைச்சு செயலாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.25 மாவட்டங்களுக்கும் அரச அதிபர்கள் உள்ளபோதும் அதில் ஒருவர் கூட முஸ்லிம் அரச அதிபர் இல்லை. 25 அல்லது 30 வருடங்களுக்கு முன்னர் மகபூல் என்ற ஒருவர் முஸ்லிம் அரச அதிபராக இருந்துள்ளார்.

மேற்சொன்ன- நாட்டு முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் அடிப்படை சமூக பிரச்சினைகளையும் சமூகத்தின் எதிர்பார்ப்பினையும் சமூகத்துக்கு நடக்கும் அநீதிகளையும் சுட்டிக்காட்டி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மிக ஆக்ரோஷமாக பாராளுமன்றில் உரையாற்றினார்.

முஸ்லிம் அரச அதிபர் நியமனம் என்பது அமைச்சர் ரிஷாத்தை பொறுத்தவரையில் – அவருக்குள்ள நீண்டகால கனவு, இலக்கு. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும், தமிழ் பேசுவோர் அதிகம் உள்ள அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் அரச அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதில் முழுமூச்சாக நீண்டகாலமாக குரல் கொடுத்து வருபவர் அமைச்சர் ரிஷாத் என்பதில் எவரும் மாற்று கருத்து கொள்ளமாட்டார்கள்.

அதுபோன்று, நிறைவேற்று ஜனாதிபதி முறையே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு என்பதையும் பகிரங்கமாக அவர்தான் தற்காலத்தில் முழங்கியும் வருகின்றார்.

சம்பந்தனுடன் ஒட்டி உறவாடி- டயஸ்போறாக்களின் பல இலட்சம் யூரோக்களுக்கும் டொலர்களுக்கும் அடிபணிந்து வடக்கும் கிழக்கும் இணைவதற்கு துணைபோகும் – வடக்கும் கிழக்கும் இனைய வேண்டும் என பகிரங்கமாக கூறும் – முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டுக்கு மாற்றமாக செயற்படும் முகா தலைவரை போன்றல்லாது , – நியாயமாக, நேர்மையாக , வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் காவலனாக தைரியமாக குரல் கொடுப்பவராகவும் அமைச்சர் ரிஸாதே உள்ளார் என்பதற்கு அவரின் இந்த பாராளுமன்ற உரை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.

இவ்வாறு சமூகத்தின் குரலாக பணியாற்றும் அமைச்சருக்கு எதிரான சதி பின்னலும்- திட்டமும் இன்னும் மறுபக்கம் முடிந்தபாடில்லை. அது காலத்துக்கு காலம் வெவ்வேறு வடிவங்களில் உலா வந்தமே உள்ளன.

றிஷாத்தின் குரல் வளையை நசுக்கினாள் மட்டும் போதும் முஸ்லிம் சமூகம் அடங்கிப் போய் விடுவர். அதன் பின் நாம் நினைத்தமாதிரி முஸ்லிம்களை ஆட்டிப்படைக்கலாம் என்று குள்ளத்தனமாக – விஷ எண்ணத்தோடு அன்று தொடங்கிய இனவாதிகளினதும் டயஸ்போறாக்களினதும் ஈனத்தனமான சிந்தனை இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.

அதில் ஒன்றுதான், எப்போவும் போல் இனவாதத்தை கக்கும் சக்தி தொலைக்காட்சியும் அமைச்சரின் உரையை இனவாத கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பியது மட்டுமன்றி- பெரும்பான்மை எம்பி ஒருவர் பாராளுமன்ற தமிழ் மொழிபெயர்ப்பாளர்களால் கூறப்பட்டதை தவறாக புரிந்து கேள்வி எழுப்புவதையும் வேண்டுமென்று ஒளிபரப்பி அமைச்சரை இனவாதியாக காட்டும் சதியை அரங்கேற்றி உள்ளது. (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது).

மட்டக்களப்பு மாவட்டத்தில்- மாவட்ட திட்டப் பணிப்பாளராக கடமை பொறுப்பேற்கவேண்டிய வஹாப்தீன் என்பவரை , தமிழ் சமூகம் விரட்டியடிக்க முயல்வதை வெளிச்சம் இட்டு காட்டாத சக்தி தொலைகாட்சி- அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் அன்வர்தீனை சிங்கள சமூகம் விரட்டியடிப்பதை வெளிப்படுத்தாத அந்த தொலைகாட்சி, இவ்வாறான அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் ரிஷாத்தை இனவாதியாக காட்ட முயல்வது அந்த சக்தி டிவியின் அசிங்கத்தனத்துக்கு சிறந்த உதாரணமாக உள்ளது எனலாம்.

முஸ்லிம்களை கருவறுக்கும் இனவாதிகளுக்கு – இனவாத ஊடகங்களுக்கு – டயஸ்போறாக்களுக்கு சாட்டையடி கொடுக்க கிளர்ந்தெழுவோம். ஒன்றுபடுவோம்.

அதனால் , முஸ்லிம் சமூகமே- நாம் அரசியல் ரீதியாக ஒன்றுபடவேண்டிய காலகட்டத்துக்கு தள்ளப்பட்டுளோம். இரு முஸ்லிம் அரசியல் தலைமைகள் இனி எமக்கு வேண்டாம். ஒரு முஸ்லிம் அரசியல் தலைமையின் கீழ் ஒன்றுபடுவோம். அந்த தலைமை யார்? என்பதை இந்த ஆக்கத்தின் மூலம் தரம் அறிந்து – அடையாளம் கண்டிருப்பீர்கள்.
அந்த அடையாளத்தை எதிர்வரும் தேர்தலில் – தேர்தல் முடிவின் ஊடாக பகிரங்கப்படுத்துவோம்.

ஏ. எச். எம். பூமுதீன்

Related Post