அஸ்ரப் ஏ சமத்
மன்னார் அண்டிய வில்பத்து காட்டில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுத்தீன், சட்டவிரோதமாக காடுகளை அழித்து கட்டடங்களையும் வீடுகளையும் அமைத்துள்ளதாகவும் அதற்கு எதிராக வனவளத் திணைக்களம் றிசாத் பதியுத்தீனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகம் மேற்படி விடயமாக சகல தஸ்தவேஜிகளை சேகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவ் விடயம் சம்பந்தமாக இன்று வெளிவந்த சிங்கள இதழான மவ்பிம பத்திரிகையில் முற்பக்கத்தில் அமைச்சர் றிசாத்தின் படத்தை பிரசுரித்து செய்தி வெளியிட்டுள்ளது.
இவ் வீடமைப்புத்திட்டத்தினை அமைப்பதற்காக அமைச்சர் றிசாத் அதிகாரிகளுக்கு கட்டளை இட்டதாகவும் அதனைக்கொண்டே குறித்த நிறுவனம் இக் காணியில் வீடுகளை நிர்மாணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.