Breaking
Mon. Dec 23rd, 2024

தேர்தல் காலத்தில் புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்திற்கு சட்டவிரோதமான முறையில் நியமனங்கள் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பு தேர்தல்கள் ஆணையாளரிடன் இன்று முறைப்பாடு தெரிவித்துள்ளது.

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் சட்டவிரோதமான முறையில் 60 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த நியமனக் கடிதங்களில் கனியமணல் கூட்டுத்தாபனத்தின் தலைவரின் கையொப்பதற்கு பதிலாக பிறிதொருவரின் கையொப்பம் இடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் களைக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இரண்டு அமைச்சுக்களில் சிலருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நிறுவன பிரதானிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றம் களைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதற்கு முன்தினத்தை குறிப்பிட்டு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலருக்கு பழைய திகதியிட்டு சேவைக்காலம் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

Related Post