Breaking
Sat. Nov 16th, 2024

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் காசிம் எழுதிய வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் ஷேகுதாவூத் நீண்டதொரு உரையை நிகழ்த்தினார் .

அவரது உரை ஆக்கபூர்வமானதாக இருந்தாலும் காலம், நேரம் என்ற பிரச்சினை காணரமாக விரைவாக முடியாதா என்ற ஏக்கப் பெருமூச்சு மண்டபத்தில் நிறைந்து காணப்பட்டது. சபை மரபு, பஷீர் ஷேகுதாவூதுக்கு மரியாதை என்ற இரு காரணங்களால் எவரும் மண்டபத்தை விட்டு வெளியேறவில்லை.

திடீரென பஷீர் ஷேகுதாவூத் ஒரு விடயத்தைக் அங்கு தெரிவித்தவுடன் மண்டபத்தில் நிறைந்திருந்தவர்கள் உஷாரடைந்ததுடன் மட்டுமின்றி, தங்களது கருத்துகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டதனைக் காணவும் கேட்கவும் கூடியதாக இருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரான பஷீர் ஷேகு தாவூத் அப்படி என்ன கூறினார் என்றுதானே கேட்கிறீர்கள்.

“அமைச்சர் ரிஷாத் பதியுதீனை வன்னியில் தோற்கடிப்பது கடினம். கிழக்கிலும் அவருக்கான ஆதரவு கூடுகிறது“ என்றார்.

இதேவேளை, காலையில் இடம்பெற்ற வில்பத்து தொடர்பான கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஜெமீல் கலந்து கொண்டார்.

அவரும் சில விடயங்களை அங்கு கூறினார். வில்பத்து தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் ஒரு பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாகவும் கூறினார். இவ்வாறான கூட்டங்களில் தான், கட்சி, அரசியல் பார்த்து கலந்து கொள்வதில்லை என்று கூறினார்.

கூட்டம் முடிந்தவுடன் ஜெமீலுக்கு பலரும் பராட்டு தெரிவித்தனர்.

Related Post